தமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த தொழிற்சங்கத்தின் ற்பாட்டாளர் லால் ஆரியரத்ன இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு தகுந்த தீர்வு கிடைக்காவிடின் நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.
அதன்படி தற்போது இடம்பெறும் கா.பொ.த . சாதாரண பரீட்சை முடிவடைந்த பின்னர் வேலை நிறுத்தப்போராட்டத்தை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.