யு.எஸ்.எயிட் எஸ்.ஏ.ஐ.எல் திட்டத்திற்கு இணங்க உலகலாவிய வர்த்தகத்துக்கான ஒருங்கிணைப்பு குறித்து இலங்கை எவ்வாறு நன்மைகளை அதிகரித்து ஆபத்துக்களைக் குறைக்க முடியும் என்ற பொருள் பற்றி இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

யு.எஸ்.எயிட் 2016 ஆம் ஆண்டில் நான்கு வருடத்திட்டமாக எஸ்.ஏ.ஐ.எல் திட்டத்தை ஆரம்பித்தது. இது இலங்கையின் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்து நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க வழி செய்கின்றது.

அமைச்சுக்கள் , அரச நிறுவனங்கள் வர்த்தக சமூகம் , வர்த்தக மன்றங்கள் , தனியார் துறையினர் மற்றும் பங்கு சந்தையினர் என பல துறையைச் சேர்ந்த சுமார் 80 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த கலந்துரையாடல் முக்கிய விவாதத்தையும் கருத்து பரிமாற்றத்தையும் உள்ளடக்கி பாரிய வெற்றியளித்ததாகக் கூறப்படுகின்றது.

ஏ.எஸ்.எயிடின் பொருளாதார வளர்ச்சி அலுவலகத்தின் பணிப்பாளர் பிரயன் விட்ன பெல் , அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம , இவ் அமைச்சின் செயளலார் சிசிர கொடிக்கார மற்றும் யு.எஸ்.எயிட் எஸ்.ஏ.ஐ.எல் திட்டத்தின் குழுத்தலைவர் கிளீன் மக்கொன்சி பிரேசர் ஆகியோர் முக்கிய சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கடந்த சில வருடங்களாக வர்த்தக சீரமைப்பை மேற்கொண்டு வருவதாகவும் எமது அரசு சர்வதேச வர்த்தகத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதன் போது தெரிவித்தார்.