குறிப்பாக முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இயற்கை குறிப்புகள் நன்கு உதவுகின்றன.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். இத்தனை நாள் நீங்கள் வேதனை பட்ட முடி சார்ந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க இங்கே எளிமையான ஒரு வழி உள்ளன. இதை பயன்படுத்தி வழுக்கைக்கு முற்றுபுள்ளி வையுங்கள்.
சமையலில் வாசனைக்காகவும், செரிமானத்திற்காகவும் நாம் சேர்க்கும் முக்கிய உணவு பொருள் தான் கொத்தமல்லி.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த கொத்தமல்லியில் உள்ளது. இது முடியின் ஆரோக்கியத்திற்கும் சிறப்பாக பயன்படுகிறது.
இழந்த இடத்தில் முடி வளர கொத்தமல்லி எண்ணெய் சிறந்த மருந்தாக இருக்கும்.
இதை தயாரிக்க தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி 1 கைப்பிடி
- ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
தயாரிப்பு
- முதலில் கொத்தமல்லியை அரைத்து கொள்ளவும்.
- அதன்பின் இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- இந்த கலவையை முடியின் வேரில் தடவி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- அதன்பின் தலைக்கு குளிக்கலாம். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தாலே வழுக்கையில் மீண்டும் முடி வளரும்.