அரசாங்கத்துடன் இணைந்து தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இழுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நேரம் இது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando )தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலையில் சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ஹரின் பெர்னாண்டோ இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
“அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் போர்நிறுத்தத்துக்குச் சென்று தேசத்தின் நலனுக்காக பொதுவான திட்டத்தின்படி செயல்பட வேண்டிய நேரம் இது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு நாட்டை நடத்துவதற்கான கூட்டுத் திட்டத்தை தொடங்க வேண்டும், எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
“தனது யோசனையை அரசாங்கம் வரவேற்குமா என்று தெரியவில்லை, ஆனால் தேசத்தின் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் . நாம் அரசியலில் ஈடுபடுவதற்கு ஒரு நிலையான தேசம் இருக்க வேண்டும்” என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.








































