Loading...
அரசை விமர்சிப்பவர்களை நீக்கும் அதிகாரம் தனக்கு முழுமையாக உள்ளதென்கிறார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa).
ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து அவர்,
“அரசின் முதுகெலும்பாக அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் அரசையும், அதன் கொள்ளைகளையும் பொதுவெளியில் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு?
Loading...
இது அவர்களின் ஒழுக்கமின்மையையும், தகுதியின்மையையும் தான் எடுத்துக்காட்டுகிறது.
அப்படியானர்களின் பதவியைப் பறிக்க அரச தலைவரான எனக்கு முழு அதிகாரம் உண்டு. இது தொடர்பில் அரச தரப்பு கட்சிகளுடன் நான் பேச வேண்டிய அவசியமில்லை” என்றார்.
Loading...








































