Loading...
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்த் தேசம் மிக மோசமாக – ஓரவஞ்சனையாக சிறிலங்கா அரசாங்கத்தினால் நடாத்தப்படுகின்றது. எனவே பஞ்சங்கள் – பட்டினிகள் ஏற்படுகின்ற போது வளங்கள் சரிசமமாக பங்கீடப்படாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி க.சுகாஷ் (K. Sukash) தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடத்தினை தெரிவித்துள்ளார்.
Loading...
பொருளாதார நெருக்கடிக்குள் நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையளில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Loading...








































