Loading...
கொழும்பு – கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலத்துறை பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 14 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முற்பகல் இந்த வீடு இடிந்து வீழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading...
சம்பவத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த கொத்தனார் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...








































