13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் சகல அதிகாரங்களும் கைகூடும் என்பது பொருள் அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே விக்னேஸ்வரன் இதனைக் குறிப்பிட்டார்.
அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சில அட்டூழியங்களை தடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது ஆரம்பக் கட்டம் மாத்திரமே என குறிப்பிட்டுள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்களுக்கான தீர்வாக சமஷ்டியை பெறும் வரையில் பயணிப்போம் என உறுதியளித்துள்ளார்.








































