தென்மராட்சி, மிருசுவில பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க முயற்சித்த குடும்பஸ்தரை, அந்த பகுதி மக்கள் பிடித்து நையப்புடைத்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. இரண்டு திருமணம் முடித்த 42 வயதான ஆசாமியொருவரே நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியுடன் அத்துமீறி நடக்க முயற்சித்த ஆசாமியை, உறவினர்கள் நையப்புடைத்ததில் அவரது கை உடைந்தது. இதையடுத்து, அயல்வீட்டுக்காரர்கள் தாக்கியதாக குறிப்பிட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றார். அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அன்றைய தினமே சிறுமியும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆசாமி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.








































