குளிர்காலத்தில் டீ குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் வெறும் வயிற்றில் தேநீர் அருந்துவதால் உடலில் பல தீமைகள் உண்டாகின்றது. வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதால் அது வயிற்றில் எரிச்சல், அமிலத்தன்மை மற்றும் நரம்புத் தளர்ச்சியையும் உண்டாக்கும்.
நீங்கள் அசிடிட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால் தேநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.. ஏனெனில் காஃபின் அதிக உள்ளடக்கம் உங்கள் அசிட்டியை அதிகரிக்கும். மேலும் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சில தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..
இரத்த சோகை இருந்தால் வெறும் வயிற்றில் டீ குடிக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது அதிகமாக தேநீர் அருந்துவது, உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக பிரச்சனைகளை உண்டாக்கும்.
இதனால் தேநீர் குமட்டல், தலைச்சுற்றல் போன்றவற்றை தூண்டும். அது அவர்களின் உடல்நிலையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் டீ எடுத்துக் கொள்ளும்போது உங்களுக்கு மிக விரைவாக பசி ஏற்படாது, மேலும் காலை உணவை அடிக்கடி தவிர்க்க நேரிடும்.
நம்மில் பலர் தேநீருடன் நம் நாளைத் தொடங்குகிறோம், ஏனெனில் இது தெளிவான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். உங்கள் காலை உணவை சாப்பிட்ட 1-2 மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் காலை தேநீரை உட்கொள்ளலாம்.








































