அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள சேதன உரத்தை உரியவாறு பயன்படுத்தி, விவசாயிகள் பிரச்சினைகளின்றி விவசாய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
களுத்துறை – பண்டாரவளை பிரதேசத்தில் நேற்று(27) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சேதன உரத்தைப் பயன்படுத்தியமையால் சிறிதளவான விவசாயிகளுக்கு விளைச்சல் குறைவடைந்துள்ளதென விவசாயிகள் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நனோ திரவ உரம் மற்றும் சேதன உரத்தை பயன்படுத்தியமையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








































