தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksha)தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் அவர் இந்த நேர்காணலை வழங்கியுள்ளார். இலங்கைக்கு இவ்வருடம் 6.9 பில்லியன் டொலர் கடனைச் செலுத்துவது மிகவும் கடினமானது எனவும், மருந்துகள், மூலப்பொருட்கள், எரிபொருள் உட்பட அனைத்திற்கும் பணத்தைத் தேட வேண்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெறுவதற்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








































