இலங்கையில் நிரந்தரமான அரசியல் எதிரியும் இருந்ததில்லை, நிரந்தர நண்பரும் இருந்ததில்லை என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த தீர்மானங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே மேற்கடண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“அடுத்த அரசதலைவர் தேர்தலில் நான் களமிறங்குவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை.
நாட்டை மீட்டெடுக்க தகுதியான அணியொன்றை உருவாக்கி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே இப்போது எமது முயற்சியாகும்.
பதவிகள் குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல. இன்று நாடே எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மக்களை மோசமாக பாதித்துக்கொண்டுள்ள நிலையில் தற்போது எவ்வாறு நாம் மீழ்வது என்பதே மக்களின் மனநிலையாகும்.
மாறாக யார் அடுத்த அரசதலைவர் , யார் பிரதமர் என நினைக்கும் மனநிலையில் மக்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்..








































