இந்தியாவில் ஒரு பெண் 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளை கொள்ளையடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் வசித்து வருபவர் ஊர்மிளா அஹிர்வார்(28). இவர் பணக்கார ஆண்களை குறி வைத்து ஆசை வார்த்தையில் பேசி பல ஆண்களை தனது வலையில் சிக்க வைத்துள்ளார். இவர் ஊர்மிளா என்ற பெயரில் மட்டுமல்லாமல் ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரிலும் அதிகப்படியான ஆண்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
காதல் பெயரில் ஆண்களை வசியம் செய்து அவர்களை திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் கழித்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடி கொண்டு ஓடுவதையே தனது தொழிலாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்தந்த பகுதி காவல்துறையினருக்கு சிலர் ஒரே பெயர் மீது புகார் அளித்து வந்துள்ளனர். இந்த புகார்களை கவனித்த காவல்துறை அதிகாரிகள் ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஊர்மிளா மீண்டும் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்பவரை 8வது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அப்போது தன் கணவருடன் காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்ட ஊர்மிளா ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கீழே இறங்கி பாக்சந்த் கோரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரை விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் ஊர்மிளாவுக்கு துணைப்போன 2 பேரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.








































