Loading...
ஐபிஎல் 2022 ஏலத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தட்டி தூக்கியுள்ளது.
சற்று முன்னர் தொடங்கிய ஐபிஎல் ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஐபிஎல் ஏலத்தில் முதல் வீரராக பஞ்சாப் அணியால் தவான் வாங்கப்பட்டார்.
இந்த நிலையில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ரூ 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.
Loading...
ரபாடாவை பஞ்சாப் கிங்ஸ் அணி 9.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
ககிஸ்டோ ரபாடா தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல நியூசிலாந்தின் டிரண்ட் பவுல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
Loading...








































