Loading...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, கிளிநொச்சி, இரணைதீவுக்கு அண்மையாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 2 படகுகளில் இருந்த 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
அவர்கள் நாச்சிகக்குடா கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர்.
Loading...








































