நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார், இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அவரின் தாய் சென்னையை சேர்ந்த செல்வராஜ் என்பவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தார்.
இதனை அடுத்து, அந்த மாணவியை அழைத்து கொண்டு சென்னை சென்ற அவர் சில நாட்களுக்கு முன் ஊட்டி வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியின் கட்டாய திருமணம் பற்றி நீலகிரி சைல்டுலைன் அமைப்பிற்கு புகார் வந்தது.
இந்த புகாரை அடுத்த காவல்துறையில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்,
அந்த விசாரணையில் அவர் மாணவியை கட்டாய திருமணம் செய்ததது தெரியவந்தது. இதனை அடுத்து அவரையும் அந்த மானவியின் தாயையும் கைது செய்த போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































