தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அரபிக் குத்து பாடல்க்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.
இதற்காக சிவகார்த்திகேயன் பல லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. நேற்று முன்தினம் அரபிக் குத்து பாடலின் போஸ்டர் வெளியாகிய நிலையில், அரபிக் குத்து பாடல் காதலர் தினமான நேற்று வெளியானது.
இந்நிலையில், அரபிக் குத்து பாடல் தற்போது ஒரு கோடியே 80 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு 10 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இந்த பாடலை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.








































