விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த இசை ஆல்பம் குறித்த அப்டேட் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் தனுஷ்ஷுடனனான பிரிவில் ஐஸ்வர்யா உறுதியாக இருக்கிறார் என்றும் தனுஷுடன் அவர் மீண்டும் சேர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் இல்லை என்று தனுஷ் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு தற்போது வரை விவாகரத்து வேண்டாம் என்கிற முடிவில் தான் தனுஷ் இருக்கிறாராம். தங்களின் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தன்னுடைய பெயருக்கு பின் இருந்த தனுஷ் பெயரை நீக்கி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.








































