Loading...
தற்போதைய அரசின் கீழ் ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு இருண்ட யுகம் ஒன்று உருவாகி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
Loading...
“நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசு தொடர்பில் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடு தாக்கப்பட்டமை, சமூக செயற்பாட்டாளரான செஹான் மாலகே கைது செய்யப்பட்டமை போன்றவை இருண்ட யுகத்தையே நினைவுபடுத்துகின்றன” என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்
Loading...








































