பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா லெஷ்மியிடம் தனது அப்பா யார் என்று கூறுவதாக கூறிய நிலையில், தற்போது பரபரப்பான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கணவர் பாரதியை பிரிந்து வாழும் கண்ணம்மா இரட்டை பெண் குழந்தையை பெற்ற நிலையில், ஒரு குழந்தை பாரதியிடமும், மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வாழ்ந்து வருகின்றது.
ஆனால் பாதியிடம் வாழ்ந்து வரும் குழந்தை தனது குழந்தை தான் என்று தெரியாமல் பாரதி பாசமாக இருந்து வருகின்றார். இந்நிலையில் கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு பாரதியையும் அழைத்துள்ள நிலையில், அன்று லெஷ்மியிடம் தந்தை யார் என்று கூறுவதாகவும் கூறியுள்ளார்.
இத்தருணத்தினை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. லெஷ்மியும் கண்ணம்மாவிடம் தனது தாய் யார் என்று கேட்ட நிலையில், அதற்கு பாரதி பதிலளித்துள்ளார்.








































