Loading...
நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாணத்திலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருளை பெற மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. மலையகம், கிளிநொச்சி பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
Loading...
இந்த நிலையில், இன்று (26) காலை முதல் யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Loading...








































