சென்னை : ராமாபுரத்தில் போதை மருந்து கொடுத்து 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பள்ளி மாணவியான 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் இருவரும், துணை நடிகர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து இன்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சிறுமியிடம் பழகி, ஆசை வார்த்தை கூறி இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவ மாணவர் வசந்தகிரி, விஷால், துணை நடிகர் சதீஷ் என்பவரும், உதவிப் பேராசிரியர் பிரசன்னா என்பவர் ஆகிய 4 பேரை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இன்று அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.








































