தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம் இவருக்கு நிறைய ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழில் நடிகை ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின்னர் ஐந்து மொழிகளில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். கிராமத்து பெண்ணாக புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகா நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று ராஷ்மிகா கலக்க ஆரம்பித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராஷ்மிகா மந்தனா வெளியிடுவது வழக்கம்.
A post shared by RASHMIKA.MANDANA.FANPAGE⭕ (@rashmika_mandana_fancl)
அந்த வகையில் தற்போது வலைதளப் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது முதல் தற்போது வரையுள்ள புகைப்படங்களை கொண்டு ஒரு வீடீயோ தாயாரித்து வெளியிட்டு இருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.








































