ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்தி சேவைக்கு இந்தத் தகவலை வழங்கினார்.
கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிப்புகள் வெளியாகி இருந்த போதும், அவை நடைபெற்றிருக்கவில்லை.
இந்தநிலையில் நேற்றையதினம் தமக்கு ஜனாதிபதி செயலகத்தினால் இந்த சந்திப்பு குறித்த அறிவித்தல் வழங்கப்பட்டதாக, எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற காணி சுவீகரிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








































