உடல் எடையை அதிகரிக்காமல் எப்பொழுதும் பிட்டாகவே இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் அவ்வாறு இருப்பது என்பது இன்றைய காலத்தில் கடும் சிரமமாகவே இருக்கின்றது.
மழைக்கு முளைத்த காளான் போன்று இன்று ஃபாஸ்ட் புட் கடைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், மக்கள் துரித உணவிற்கு அடிமையாகி வருகின்றனர்.
இதனால் உடல் எடை அதிகரிப்பதுடன், பல நோய் தொந்தரவினாலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக டயட் என்ற பெயரில் கஷ்டத்தில் இருப்பவர்களும் உண்டு.
கடுமையான டயட் வேண்டாம், நமக்கு பிடித்த உணவை தவிர்க்க வேண்டாம், அதே சமயம் இரண்டே வாரத்தில் நீங்கள் விரும்பும் உடல் அமைப்பை பெற ஒரு இயற்கை வழியை தெரிந்து கொள்ளலாம்.
எடையைக் குறைக்கும் பானம்
தேவையான பொருட்கள்
ஓமவல்லி இலை – 7
புதினா இலை – 7
தயிர் – 5 தேக்கரண்டி
இஞ்சி – 1 இன்ச் அளவு
பானம் தயாரிக்கும் முறை
- முதலில் மிக்ஸி ஜாரில் ஏழு கற்பூரவல்லி இலை, புதினா இலை இவற்றினை சுத்தம் செய்து போடவும்.
- பின்பு ஐந்து தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தோல் சீவிய ஒரு இன்ச் அளவு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
- இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நுரை பொங்க அரைத்து கொள்ளவும்.
- கடைசியில் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும்.
குறித்த பானம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.








































