இலங்கையில் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலில் பங்குபற்றும் அரச ஊழியர்களின் சம்பள வெட்டுக் கூற்றை அரச தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளக் குறைப்பு தொடர்பில் அரச தலைவர் அலுவலகத்தின் கடிதத் தலைப்புகளை பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருவதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஹர்த்தாலில் பங்கேற்பதன் காரணமாக அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் அரச தலைவர் அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த பொய்யான செய்தி தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச தலைவர் மேலும் தெரிவித்துள்ளது








































