தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் சுமார் 400 வெளிநாட்டு தபால் பொதிகள் தேங்கியுள்ளன.
இதனால் தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக தபால் சேவை தற்போது செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.








































