இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லோக்கல் சரக்கு
இப்படத்தில் தினேஷ் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவரின் ‘மெடிக்கல் மிராக்கல்’, ‘பூமர் அங்கிள்’ போன்ற படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார்.
லோக்கல் சரக்கு ஃபர்ஸ்ட்லுக்
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘லோக்கல் சரக்கு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யோகிபாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இடம்பெற்றுள்ள இப்படத்தின் போஸ்டரை நடிகர் சூரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.








































