அர்ஜூனா ரணதுங்கா இலங்கை ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.
இலங்கை விளையாட்டுத் மந்திரி ரோஷன் ரணசிங்கே இந்த நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் எம்.பி.யுமான அர்ஜூனா ரணதுங்கா இலங்கை ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். இலங்கை விளையாட்டுத் மந்திரி ரோஷன் ரணசிங்கே இந்த நியமனத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினையை தொடர்ந்து விளையாட்டு மந்திரி பொறுப்பை நமல் ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து விளையாட்டு கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் உறுப்பினர்கள் அந்த பதவியில் இருந்து விலகினர் என்பது நினைவுகூரத்தக்கது.
15 பேரை கொண்ட விளையாட்டு கவுன்சில் இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து அந்த நாட்டு விளையாட்டு மந்திரிக்கு ஆலோசனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








































