Loading...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் தங்க ஆபரணங்களை கடத்திய மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் ஊடாக ஆபரணங்களை வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த போதே கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க ஆபரணங்கள்
இவர்களிடம் இருந்து ஆயிரத்து இருநூறு கிராம் (1200g) தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி சுமார் மூன்று கோடி ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...








































