- சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகிறது.
- டிசைனை பொருத்தவரை புதிய கேலக்ஸி S23 சீரிஸ் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த S22 சீரிஸ் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி ஏராளமான விவரங்கள், ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டிசைன், அம்சங்கள், வெளியீட்டு தேதி என பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீடு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முந்தைய தகவல்களின் படி புதிய சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. கேலக்ஸி S23 சீரிசில் கேலக்ஸி S23, கேலக்ஸி S23 பிளஸ் மற்றும் கேலக்ஸி S23 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவலை டிப்ஸ்டர் அந்தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சாம்சங் கேலேக்ஸி S23 சீரிஸ் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார். புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படாத காரணத்தால், ஸ்மார்ட்போன்களின் விலை இறுதி செய்யப்படலாமல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் கேலக்ஸி S23 சீரிஸ் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இது பற்றி சாம்சங் தரப்பில் இதுவரை எந்த விதமான தகவலும் வழங்கப்படவில்லை. முன்னதாக புதிய கேலக்ஸி S23 சீரிஸ் டம்மி யூனிட்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதில் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்கள், சாம்சங் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேல்கஸி S22 மற்றும் கேலக்ஸி S22 பிளஸ் போன்றே காட்சியளிக்கின்றன.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் 6.1 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3900 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.








































