Loading...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பு இன்று (10.04.2023) ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Loading...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி
இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் கோபிநாத் பொன்னுத்துரை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜிதா ஹேரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
Loading...








































