ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையில் இருந்து படைகளை இடமாற்றம் செய்வது தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியதாக, ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம், வாக்னர் குழுமத்தின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினை பெலாரஸுக்கு வர அனுமதிப்பதன் மூலம் ரஷ்யாவில் ஆயுதமேந்திய கலகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தமொன்றை லுகாஷென்கோ மேற்கொண்டிருந்தார்.
ஆனால் இன்று (06), பிரிகோஜின் இன்னும் ரஷ்யாவில் தான் உள்ளார் அவர் பெலாரஸில் இல்லை என தெரிவித்துள்ளார்.
இடமளிப்பதற்கான சலுகை
மேலும் அவர், பெலாரஸில் வாக்னரின் சில போராளிகளுக்கு இடமளிப்பதற்கான சலுகை இன்னும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், போராளிகள், பெலாரசிற்கு சென்று அதன் வழக்கமான ஆயுதப் படைகளுடன் பதிவு செய்யலாம் அல்லது அணிதிரட்டலாம் என ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.








































