Loading...
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ மற்றும் யால பூங்காக்கள் சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Loading...
சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது
உடவலவ மற்றும் யால பூங்காக்களை சுற்றுலாப் பயணிகளுக்காக தற்காலிகமாக மூடுவது தொடர்பிலும் அந்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
எவ்வாறாயினும், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ மற்றும் யால பூங்காக்களை மூடுமாறு ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Loading...








































