தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ஆதாரங்களிலும் அழுக்கு நீர் கலந்துள்ளதால், கொதித்தாரிய நீரை அருந்துவது மிகவும் அவசியம் என பிரதி சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் கலாநிதி ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கீரை வகைகள், பச்சை மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உணவு பாதுகாப்பாக இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும்.
இதேவேளை, இடைதங்கல் முகாம்களில் உள்ளவர்கள் இடையே சின்னம்மை, கண் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும்.
எனவே அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.








































