சாய்ரா, தனது கணவர் மற்றும் இசை புயல் ஏ.ஆர். ரகுமானை பிரியவுள்ளதாக ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
ரகுமான் – சாய்ரா பிரிவு
இசை புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு, தனது கணவரை பிரியவுள்ளதாக செவ்வாய் இரவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் கூறியிருப்பது “திருமணமாகி பல வருடங்கள் கழித்து, தனது கணவர்
ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை தான் எடுத்துள்ளதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த முடிவு எடுத்ததற்கான காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட ஒரு உணர்ச்சி பூர்வமான மனக்கஷ்டம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாங்கள் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் எங்களது வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.இந்த முடிவு மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்ட ஒரு விடயம் மக்கள் அனைவரும் எங்களது நிலையை புரிந்து கொண்டு தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் ரகுமான் மற்றும் சாய்ரா கடந்த 1995 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு ரகுமான் தனது திருமணம் குறித்து பேசுகையில், “திருமணத்தை பற்றிய யோசனை அப்போது எனக்கு இல்லை. எனக்கென்று ஒரு பெண்ணை தேடி செல்லவும் அப்போது தோணவில்லை.
ஆகவே என் அம்மா பார்த்த பெண்ணை நான் திருமணம் செய்துகொண்டேன்” என்றார் அவர். “உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், எனக்கென மணப்பெண்ணைத் தேடிச் செல்ல எனக்கு நேரமில்லை.
நான் ரங்கீலா, பம்பாய் போன்ற படங்களில் பிசியாக பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. என் அம்மாவிடம் பெண் பார்க்க சொன்னேன். அப்படி நடந்தது தான் எங்கள் திருமணம்” என்றார்.இந்த நிலையில் சாய்ரா ரகுமானுடனான பிரிதலை கூறியுள்ளார்.








































