Loading...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
100 மில்லியன் ரூபா
சந்தேக நபர்களான 37 வயது ஆணும் 47 வயது பெண்ணும் தாய்லாந்தின் பேங்கோக்கில் போதைப்பொருளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
Loading...
அவர்கள் இந்தியா – சென்னைக்குச் சென்று, பின்னர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
சந்தேக நபர்கள், பொருட்களில் மறைத்து வைத்திருந்த 8.22 கிலோகிராம் குஷ் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...








































