தமிழகத்தை சேர்ந்த நடராஜன், இந்திய அணிக்கான ஜெர்சியை அணிந்து புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று தொடர்க்ளில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் தெரிவு செய்யப்பட்டு அவுஸ்திரேலியா அங்கு சென்றுள்ளார்
அங்கு கொரோனாவிற்கான 14 தனிமைப்படுத்தலில் வீரர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் இருக்கும் நடராஜன், இந்திய அணிக்கான ஜெர்சியை அணிந்து புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ஸ்பெஷல் ஜெர்சியை அணியும் போது, அது ஒரு தனி உணர்வை கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இத்தொடரில் இந்திய அணி, பழைய இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து, புதிதாக அணிந்து விளையாடவுள்ளதால், இதை இந்திய வீரர்கள் பலரும் அணிந்து தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்..