கிட்டத்தட்ட லண்டன் பெருநகரத்திற்கு இணையான பிரம்மாண்ட பனிப்பாறை ஒன்று பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகிலுள்ள அண்டார்டிகா பகுதியிலிருந்து பிளந்துள்ளது.
பிரித்தானியாவின் Halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த தளத்தில் யாரும் இல்லை என்பதால், மனித உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப் படுக்கையிலிருந்து தனியாக பிளந்துள்ள இந்த பனிப்பாறை 1,270 சதுர கி.மீ., பரப்பளவும் 150 மீட்டர் தடிமனும் கொண்டது. இது கிட்டத்தட்ட லண்டன் பெருநகரம் அளவிற்கு பெரியது.
பனிப்பாறையின் நகர்வை GPS மூலம் செயற்கைக் கோளிலிருந்து கண்காணித்து வருவதாக British Antartic Survey ஆய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பிளக்க ஆரம்பித்த இந்த பனிப்பாறை, இப்போது முழுவதுமாக பிளந்து இரண்டாக பிரிந்துள்ளது.
இந்த பனிப்பாறை குறித்து, பிரித்தானியாவின் பனிப்பாறை நிபுணரும் வேல்ஸில் உள்ள Swansea பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான Adrian Luckman தொடர்ந்து ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார். உடைந்த இந்த பனிப்பாறை எப்போது பல பாகங்களாக பிளவுபேரும் என்பது குறித்து மதிப்பிட்டு வருகிறார்.