அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் பிரட் லீ.
இன்றளவும் உலகளவில் உள்ள சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் பிரட் லீ.
பிரட்லீ கடந்த 2006ஆம் ஆண்டு எலிசபெத் கெம்ப் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் 2009ஆம் ஆண்டு பிரட்லீ – எலிசபெத் தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
எலிசபெத் கெம்புக்கு பிரிஸ்பேனில் உள்ள ரக்பி விளையாட்டு வீரருடன் நெருக்கமான தொடர்பு இருந்த நிலையில் அவரை மணக்க சென்றதால் தான் பிரட்லீ அவரை பிரிந்தார் என அப்போதே கிசுகிசுக்கப்பட்டது.
இதன்பின்னர் பிரட் லீ கடந்த 2014ஆம் ஆண்டு லானா ஆண்டர்சன் என்பவரை மணந்து கொண்டார்.