இந்த நாட்களில் அரசியல், பிக் பாஸ், விஸ்வரூபம் 2 என படு பிஸியாக இருக்கிறார் உலக நாயகன்.
இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலிளிக்கும் நடவடிக்கைகளிலும் கமல் ஈடுப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் “விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?” என ரசிகர் ஒருவர் கமலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு கமல், “விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். அவர் எனக்கு பிடித்த தம்பி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பில் தகவல் அறிந்த விஜய் கமலுக்கு தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அந்த டுவிட்டிற்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
பின்னர் கமல் விஜய்க்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பி நன்றி தெரிவித்துள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் பிஸியாக இருக்கும் இரண்டு பிரபல நட்சத்திரங்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். அரசியல் நகர்வாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது