20/20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் அரோன் பின்ச் உலக சாதனை படைத்துள்ளார்.
20/20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற முதல் வீரராக அவர் மாறியுள்ளார்.
இன்று சிம்பாவே அணியுடன் இடம்பெற்ற 20/20 கிரிக்கெட் போட்டியில் 76 பந்துகளில் 172 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் ஓவரில் 229 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் அரோன் பின்ச் 76 பந்துகளுக்கு முகம் கொடுத்து 10 ஆறு ஓட்டங்கள், 16 நான்கு ஓட்டங்கள் அடித்துள்ளார். இதன் ஊடாக அவர் 172 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.
அதற்கமைய 20/20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக அவர் சாதனை படைத்தள்ளாார்.
இதற்கு முன்னர் 156 ஓட்டங்களை பெற்று அரோன் பின்ச் சாதனை படைத்திருந்தார். 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று அவரது சாதனையையே முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.