இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரபல கட்சி ஒன்றில் இணைந்து குறித்த கிரிக்கெட் பிரபலம் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.
அரசியல் பிரவேசம் தொடர்பில் இந்தியாவின் பிரபல சோதிடர்கள் பலரை சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் குறித்த பிரபலம் அரசியலுக்கு வர முன்னர் முதல் நடவடிக்கையாக அவர் தொடர்பில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.
தென்னிந்தியாவின் பிரபல இயக்குனரான பிரபு தேவா இந்த படத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த காலங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவையும் இவ்வாறு அரசியலில் இணையுமாறு ஐக்கிய தேசிய கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அந்த கோரிக்கையை அவர் நிராகரித்தார்.