Loading...
ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.
விராட் கோஹ்லி 911 புள்ளிகள் பெற்று தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
இறுதியாக இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளில் 75, 45, 71 ஓட்டங்களை குவித்து கோஹ்லி முதலிடத்தை பிடித்துள்ளார்.
Loading...
1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்ரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் மாத்திரமே இதுவரை அதிக புள்ளிகளை பெற்றவராகும். அவர் 918 புள்ளிகள் பெற்றிருந்தார்.
அவரது சாதனையை விராட் கோஹ்லி முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- 818 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இந்த பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
- 808 புள்ளிகள் பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
- 806 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணியின் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் 4 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
- 803 புள்ளிகள் பெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்னர் இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
- 785 புள்ளிகள் பெற்றுள்ள நியூசிலாந்து அணியின் ரோஸ் டெய்லர் இந்த பட்டியலில் 6 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
Loading...