இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுவதுமாக தோற்றல் கூட புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலே நீடிக்கும்.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ஆம் திகதி துவங்கவுள்ளது.
இதற்கான பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 106 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 5-0 என தோற்றால் 112 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கும், வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு 107 புள்ளிகளுடன் முன்னேறிவிடும்.
அதே சமயம் இந்திய அணி 5-0 என்று வெற்றி பெற்றால் தற்போது இருக்கும் 125 புள்ளிகளுடன் 4 நான்கு புள்ளிகள் அதிகம் பெற்று 129 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து அணி 94 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு தள்ளப்படும்.