இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹலி புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவர் வேகமாக 6000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையே படைத்துள்ளார்.
4-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. விராட் கோஹ்லி இந்த போட்டியில் 9 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார்.
அதற்கமைய டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
தனது 70வது டெஸ்டில் விளையாடி வரும் விராட் கோஹ்லி தனது 119வது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த சாதனைனை சுனில் கவாஸ்கர் முதலில் படைத்துள்ளார்.
அவர் மிக குறைந்த இன்னிங்சில் 5000 ரன்னிலிருந்து 6000 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.