Loading...
வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் என்பதுடன், 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நவம்பர் மாதம் வடக்கின் அனைத்து பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், இதன்காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆயத்தமாக வைத்திருப்பதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Loading...
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் வட மாகாண பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
Loading...