சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பெண் காசாளர் அவருக்கு உதவிய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
ரஷ்யாவின் Omsk மாகாணத்தின் Nazyvaevsk பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிற்கு 28 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் வந்துள்ளார்.
சுமார் 25 நிமிடங்கள் குறித்த கர்ப்பிணிப் பெண் ஷாப்பிங் செய்துள்ளார்.
அங்கு இருந்த காசாளர் பெண்ணிடம் தனக்கு திடீரென்று வயிறு வலிப்பதாகவும், குழந்தை பிறப்பதை போன்று உணருவதாகவும் கூறியுள்ளார்.
இதனால் காசாளரான Elena Barsukova(35) என்ற பெண் உடனடியாக உதவிக்கு அங்கிருந்த மற்றொரு பெண் ஊழியரை அழைத்துக் கொண்டு பின் உடனடியாக அவசரசிகிச்சை பிரிவுக்கு தெரிவித்து விட்டு, அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவியுள்ளார்.
இந்த சம்பவம் எல்லாம் அடுத்த 11 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது. அவசர நேரத்தில் உதவிய Elena Barsukova-வுக்கு அந்த மார்க்கெட்டின் மேலாளர் பாராட்டியுள்ளார்.
தற்போது குழந்தை மற்றும் தாய் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதால், அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அத்துடன் குறித்த கர்ப்பிணிப் பெண் அழகான ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தாயின் பெயர் மற்றும் விபரம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இருப்பினும் இது அவருக்கு 6 வது குழந்தை என்று உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.