சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது முகாம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக அந்நாட்டு அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸின் சூரிச்சில் உள்ள Duttweiler என்ற நகராட்சி நிர்வாகம் தான் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதே நகரில் அகதி்கள் முகாம் அமைப்பது, புகலிடக்காரர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 24.5 மில்லியன் பிராங்க்(360,72,29,638 இலங்கை ரூபாய்) ஒதுக்கியுள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அகதிகள் முகாம் அமைப்பது தொடர்பாக அடுத்தாண்டு பொதுமக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாகவும், இந்த வாக்கெடுப்பிற்கு பிறகு 2018-ம் ஆண்டு முதல் கட்டுமானப்பணி தொடரப்படும்.
தற்போது கட்டுப்பான பணியை மேற்கொள்ள நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
முகாம் பயன்பாட்டிற்கு வரும் ஆண்டு முதல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு புகலிடக்காரர்கள் இம்முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.